Advertisement

தேர்தல் வெற்றியை கொண்டாட தடை !

பொது ஏப்ரல் 27,2021 | 15:37 IST

Share

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ல் எண்ணப்படுகின்றன. ஏற்கனவே, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் முடிவுகளுக்கு பிந்தய வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து, அமர்க்களப்படுத்த ஒன்று கூடுவார்கள். அந்த சூழ்நிலையில், தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள், அதற்கான சான்றிதழை பெறும்போது, அவருடன் இரண்டு நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 2ம் அலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தேர்தல் ஆணையமே காரணம். பிரச்சாரத்தின்போது கொரோனா விதிமீறல்களை ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று காட்டமாக கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சியினர் கூடுவார்கள் என்பதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த, மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரைத்து இருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X