Advertisement

ரஷ்ய நிறுவனம் தகவல்

பொது ஏப்ரல் 27,2021 | 16:00 IST

Share

இந்தியாவில் கொரோனா கடுமையாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மே 1 முதல் 18 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்போதைக்கு, இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷியாவில் மட்டுமே ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் ஐந்து பார்மா கம்பெனிகளுடன் ரஷ்யா ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 85 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கப்படவுள்ளது. ஸ்புட்னிக்- தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை பெற்றுள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முதல் கட்டமாக ரஷியாவில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறது. அதன்படி, ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் மே 1 ம் தேதி இந்தியாவுக்கு கிடைக்கும் என, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரீவ் Kiril Dmitriev தெரிவித்துள்ளார். ஆனாலும் முதல் கட்டமாக எத்தனை தடுப்பூசிகள் வரும், எங்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அவை என்பது பற்றியெல்லாம் அவர் பதிலளிக்கவில்லை. கொரோனா தொற்று அபாயத்திலிருந்து இந்தியா விடுபட ரஷ்ய தடுப்பூசி சப்ளை உதவும் என்றார். இந்தியாவின் ஐந்து நிறுவனங்களில் முதல் மாதத்தில் 5 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசிகள் தயாராகும்; அதற்கடுத்த மாதங்களில் தடுப்பூசி உற்பத்தி அதிகமாகும் எனவும் கிரில் டிமிட்ரீவ் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X