Advertisement

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

பொது மே 05,2021 | 21:00 IST

Share

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. 20ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்படலாம். மெட்ரோ ரயில், பேருந்துகள், டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்தில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் மற்றும் டீ கடைகள் பகல் 12 மணிவரை மட்டும் செயல்படலாம். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல தடையுமின்றி செயல்படலாம். சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. மற்ற நாட்களில் காலை 6 முதல் பகல் 12 மணிவரை செயல்படலாம். வணிக வளாகங்களில் செயல்படும் பலசரக்கு, காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். உள்அரங்க நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல், சமூதாயம், விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தியேட்டர்கள் செயல்பட அனுமதி இல்லை. இறுதி ஊர்வலங்கள் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். ஏற்கனவே அமலில் உள்ள இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அதற்குரிய கட்டுப்பாடுகளுடன் தொடரும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X