Advertisement

மகேந்திரன் ஒரு துரோகி! கமல்ஹாசன் காட்டம்!

பொது மே 06,2021 | 22:25 IST

Share

மக்கள் நீதி மையத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் ராஜினாமா செய்தனர். அதில் துணைத்தலைவர் மகேந்திரனும் ஒருவர். தேர்தல் தோல்விக்கு பிறகும் தலைவர் கமல்ஹாசன் அரசியல் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை. இனியும் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் விலகுகிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள். அந்த துரோகிகளின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என்று குறிப்பிட்டுள்ளார். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ள துணிந்தார். கட்சிக்காக உழைக்க தயாராக இருந்தவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. தமது திறமையின்மை, நேர்மையின்மை, தோல்வியை அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்பது தெரிந்தே அவரே விலகி கொண்டார். தோல்வியின்போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளை பற்றி ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X