Advertisement

4 ஐஏஎஸ் அதிகாரிகள் செயலர்களாக நியமனம்

அரசியல் மே 07,2021 | 15:25 IST

Share

முதல்வராக பொறுப்பேற்றதும் , தலைமை செயலகத்தில் 5 கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்து போட்டார் . . கையேழுத்து போட்ட 5 கோப்புகள் : 2.07 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் . இந்த மாதம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் தரப்படும் . ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுகிறது அரசு உள்ளூர் பஸ்களில் நாளை முதல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் . அதற்கான அடையாள அட்டை வழங்கப்படும் . மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் . ”உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற திட்டம் மூலம் செயல்படும் . அதை கண்காணிக்க ஐ ஏ எஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் . தமிழக அரசின் காப்பீடு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா சிகிச்சை பெறலாம் . முதல்வரின் தனி செயலர்களாக 4 ஐ ஏ எஸ் அதிகாரிகள் உதயசந்திரன் , உமாநாத் , எம் எஸ் சண்முகம் , அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளனர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X