Advertisement

கொரோனா பணிகளை சிறப்பாக செய்ய ஸ்டாலின் உத்தரவு

பொது மே 09,2021 | 16:00 IST

Share

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு அமலுக்கு வரும் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார் ஸ்டாலின் . அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் . அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகளுக்கு தரமான உணவு , மருத்துவ வசதிகள் , மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனை வீணாக்காமல் முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லையில் அரசு கவுன்டர்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை கண்காணிக்க வேண்டும். கள்ளச்சந்தையில் மருந்து விற்பனை தடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவம், வருவாய், காவல், நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி, ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

oce
oce , . 10-மே-2021 | 07:01:28 IST Report Abuse

மொதல்ல எல்லாம் ஒழுங்கா நடக்கற மாதிரி தான் தெரியும். மூணு நாலு வருஷம் ஆகட்டும் நடப்பது என்னன்னு அப்போ தெரியும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X