Advertisement

மத்திய அரசிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

பொது மே 10,2021 | 17:12 IST

Share

தமிழகத்திற்கு தினமும் 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலிடம் போனில் பேசிய முதல்வர் இதனை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு தினமும் 7 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. அது போதுமானதாக இல்லை. இந்த ஒதுக்கீட்டை 20 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். அப்போதுதான், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். கோரிக்கையை பரிசீலித்து ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி அளித்தார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Indhuindian
Indhuindian , இந்தியா. 11-மே-2021 | 06:53:43 IST Report Abuse

இளையதளபதி தான் முதல்லயே எச்சரித்து விட்டாரே அப்பவே இந்த போலீஸெல்லாம் சுதாரிச்சுக்க வேணாமா? தொகுதியோ காட்பாடி செய்வதோ வக்கீல் தோஷில் இப்படி நடப்பதை என்ன ஆச்சரியம் இது சும்மா ட்ரைலர்தான் மெயின் பிக்ச்சர் இன்னும் இருக்கு

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X