Advertisement

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் விதிமீறல்

பொது மே 13,2021 | 19:30 IST

Share

சென்னை, பள்ளிக்கரணையில் காற்றில் பேனர் பறந்து வந்து விழுந்ததில், இளம்பெண் சுபஸ்ரீ லாரியில் சிக்கி இறந்தார். அதன்பிறகு அரசியல் கட்சிகள் பேனர் வைக்க ஐகோர்ட் தடை விதித்தது. ஆரம்பத்தில் இந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. காலப் போக்கில் உத்தரவு காற்றில் பறந்தது. தடையை மீறி பேனர் வைக்க ஆரம்பித்தனர். சட்டசபைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. கரூரில் வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராகியுள்ளார். திமுக வெற்றியையும் செந்தில்பாலாஜி அமைச்சரானதையும் கொண்டாடும் வகையில் கரூர் பஸ் நிலையம் மற்றும் நகர் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பேனர் சரிந்து விழுந்து அசம்பாவிதம் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X