Advertisement

மாநகராட்சி புது திட்டம்

பொது மே 16,2021 | 16:15 IST

Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சென்னையில் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று வரை 5703 பேர் இறந்துள்ளனர். தினமும் கிட்டத்தட்ட 80 முதல் 90 பேர் பேர் இறப்பதால் மயானங்கள், கல்லறைகளில் பிணங்கள் வரிசையாக கிடத்தப்படுகின்றன. மயானங்களில் இடம் கிடைக்காததால் சடலத்தை வாகனத்தில் வைத்துக் கொண்டு உறவினர்கள் கல்லறை கல்லறையாக அலைகின்றனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி புது திட்டம் வகுத்துள்ளது. இனி, பிணத்தை எரியூட்டவும், அடக்கம் செய்வதற்காகவும் ஆன்லைன் மூலம் டைம் ஸ்லாட்டை புக் செய்யலாம். அந்த நேரத்துக்கு பிணத்தை கொண்டு சென்று தகனமோ, அடக்கமோ செய்து விட்டு சீக்கிரமே வீடு திரும்பலாம். அரசு தனியார் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக இருக்கின்றன என்பதை அறிய ஆன்லைன் மூலம் அறியும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, எந்தெந்த மயானம், கல்லறைகளில் எந்தெந்த நேரம் ஃப்ரீயாக இருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக புதிய இணைய தளம் உருவாக்கப்படுகிறது; சென்னை மாநகராட்சியின் ஐடி பிரிவினர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்; டைம் ஸ்லாட்டை புக் செய்வதற்கான ஆன்லைன் வசதி மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என, மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி கூறினார். மாநகராட்சி இணையதளத்தில் டைம் ஸ்லாட்டை அறிந்து போன் மூலமும் புக் செய்து கொள்ளலாம். ஆனால் மின்மயானயங்களை 24 மணி நேரமும் இயங்க வைக்க முடியாது; இடைவிடாமல் இயங்கினால் மின் தகன மேடைகள் பழுதடைந்து விடும்; எனவே, பிணங்கள் அதிகம் வந்தால் மறுப்பு சொல்லாமல் இரவிலும் தகனம் செய்யும்படி மயான ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளோம் என, மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டி தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X