Advertisement

செய்தி சுருக்கம் | 8AM | 18-05-2021 | Short News Roundup | Dinamalar

செய்திச்சுருக்கம் மே 18,2021 | 08:00 IST

Share

அரபிக்கடலில் உருவான டாக்டே tauktae புயல் குஜராத்தின் போர்பந்தர் - மகுவா இடையே கரையை கடந்தது. அப்போது 185 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பலத்த மழையும் உள் பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் விழுந்தன. மின்சாரம் தடைபட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்டு குழுவினர் புயல் பாதிப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் மும்பை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. புயல் காரணமாக மும்பையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X