Advertisement

டில்லி போலீஸ் அறிவிப்பு

பொது மே 18,2021 | 13:25 IST

Share

டில்லியில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்தில் கடந்த 4ம்தேதி இரு தரப்பு மல்யுத்த வீரர்கள் இடையே பயங்கர சண்டை மூண்டது. இதில் தேசிய ஜூனியர் முன்னாள் சாம்பியன் சாகர் ராணா உட்பட 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சாகர் ராணா இறந்தார். இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார், ராணா இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த மோதல் நடந்தது தெரிய வந்தது. சுஷில் குமார் மீது கொலை, கடத்தல், கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் டில்லி போலீசார் வழக்கு பதிந்தனர். சுஷில்குமாருக்கு எதிராக டில்லி கோர்ட் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. தலைமறைவாக இருக்கும் சுஷில்குமாரை பற்றி தகவல் கொடுத்தால் 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டில்லி போலீஸ் அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X