Advertisement

சென்னை மாநகராட்சி திட்டம் சக்சஸ்

பொது மே 18,2021 | 18:40 IST

Share

சென்னையில் தினமும் சராசரியாக 7,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்; நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல போதுமான ஆம்புலன்ஸ்கள் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு கார் ஆம்புலன்ஸ் சேவை கடந்த 13ம்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. டிரைவர் சீட் மற்றும் பின்புற பகுதியை பிரிக்கும் விதமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 250 கார்கள் ஆம்புலன்ஸ்களாக மாறி சேவை செய்து வருகின்றன. சென்னையில் பல நோயாளிகள் கார் ஆம்புலன்சை நாடுகின்றனர். 16ம் தேதி வரை 1200க்கு அதிகமான நோயாளிகள் கார் ஆம்புலன்சை பயன்படுத்தியுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார். சென்னையில் அதிக பாதிப்பு உள்ள அடையாறு, வளசரவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் தினமும் 5 முதல் 10 நோயாளிகளை ஒரு கார் ஆம்புலன்ஸ் அழைத்துச் செல்கின்றன. பாசிடிவ் ரிசல்ட் வந்த ஒரு நபர் கார் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால், முதலில் பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்; மருத்துவமனையா, கேர் சென்டரா? வீட்டில் தனிமைப்படுத்துதலா? என்பதை டாக்டர் தீர்மானித்ததும் அங்கிருந்து கார் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்படுவார். கார் ஆம்புலன்ஸ் சேவையை பெற மண்டல வாரியாக தொலைபேசி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: திருவொற்றியூர் - 044 46556301 மணலி - 044 46556302, மாதவரம் - 044 46556303, தண்டையார்பேட்டை - 044 46556304, ராயபுரம் - 044 46556305, திரு.வி.க.நகர் - 044 46556306, அம்பத்தூர் - 044 46556307, அண்ணா நகர் - 044 46556308, தேனாம்பேட்டை - 044 46556309, கோடம்பாக்கம் - 044 46556310, வளசரவாக்கம் - 044 46556311 ஆலந்தூர் - 044 46556312, அடையாறு - 044 46556314, பெருங்குடி - 044 46556313, சோழிங்கநல்லூர் 044 46556315


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X