Advertisement

ஐகோர்ட் உத்தரவை ஏற்று அரசு முடிவு

பொது மே 19,2021 | 20:46 IST

Share

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. * கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும். * கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். * கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை மக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும். * கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். * கோயில் சொத்துகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோயில் வருவாயை பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும் ஆகிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். கோயில் சொத்துக்களின் விவரங்களை அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, 2018 ல் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யார்? கோயில் சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்ற விவரங்களை 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் மதுரைக்கிளை இந்தாண்டு தொடக்கத்தில் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவின்படியே கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிடும் முடிவை அரசு எடுத்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X