Advertisement

இல்லை என்கிறது தமிழக அரசு

பொது மே 20,2021 | 16:30 IST

Share

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு உண்டாகிறது. பல மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பூஞ்சை நோயால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்ற விவரம் தெரிய வந்துள்ளது. அவர்களில் 4 பேருக்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில், கோவில்பட்டி நரசிம்மபுரத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அவர் இறந்தார். கரும்பூஞ்சையால் தமிழகத்தில் நிகழும் முதல் பலி இது என கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கரும்பூஞ்சை பாதிப்பால் யாரும் இறக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். கரும்பூஞ்சை நோய் முழுமையாக குணப்படுத்தக்கூடியதுதான்; பயமோ, பதற்றமோ வேண்டாம். ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். ராதாகிருஷ்ணன் செயலாளர், சுகாதாரத்துறை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறுகையில் இதற்கு முன்னால் ஆண்டுக்கு 10 பேர்தான் கரும்பூஞ்சைக்காக எங்களிடம் வருவார்கள்; கொரோனாவுக்கு பிறகு தினமும் 5 முதல் 10 பேர் கரும்பூஞ்சை பாதிப்புக்காக வருகின்றனர் என்றார். அதுவும் 2வது அலைக்கு பிறகுதான் கரும்பூஞ்சை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என டாக்டர் மோகன் காமேஸ்வரன் சொன்னார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X