Advertisement

POFMA சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு | அரவிந்த் கெஜ்ரிவால்

பொது மே 20,2021 | 19:30 IST

Share

சிங்கப்பூரில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் மூலம் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சிங்கப்பூர் இந்தியா இடையே விமான சேவையை நிறுத்த வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த தகவல் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிங்கப்பூர் அரசு இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. அரசியல்வாதிகள் உண்மையான கருத்துகளை மட்டுமே வெளியிடவேண்டும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விவின் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து இந்தியாவின் கருத்து அல்ல என தெரிவித்துள்ளார். ஆதரமற்ற கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் இருநாட்டு உறவு பாதிக்கப்படும் என்றார். சிங்கப்பூர் உயர் தூதர் சைமன் வோங் பேசும் போது, ஆன்லைன் பொய்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் கையாளுதல் சட்டமான ( Protection from online falsehoods and Manipulation Act) POFMS சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும், இருப்பினும் இந்தியாவின் விளக்கம் திருப்தியாக இருப்பதாக கூறினார். சிங்கப்பூரில் POFMA சட்டத்தின் மூலம் இணையத்தில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிங்கப்பூர் தொடர்பான போலி செய்திகளை வெளிநாட்டில் இருந்து பரப்பினாலும் அதை தடுக்கும் வகையில் சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டு அந்த தகவல்களை நீக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு உண்டு. போலி செய்திகளை பரப்பினால் 50 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படுகிறது. கெஜ்ரிவாலின் உருமாறிய கொரோனா தொடர்பான செய்திகள், பதிவுகளை சிங்கப்பூர் மக்கள் சமூகவலைதளத்தில் பார்க்கும் போது, அதை போலி என சுட்டிக்காட்டும் படி பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X