Advertisement

நகை கொள்ளை போனதாக கான்ஸ்டபிள் மனைவி நாடகம்!

சம்பவம் மே 26,2021 | 17:14 IST

Share

நகை கொள்ளை போனதாக கான்ஸ்டபிள் மனைவி நாடகம்! போலீஸ் விசாரணையில் குட்டு அம்பலம் சென்னை அருகே திருமுல்லைவாயில் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் கான்ஸ்டபிள் தர்மராஜ். இவர் மனைவி சந்திரலேகா கர்ப்பமாக உள்ளார். நேற்று முன்தினம் தர்மராஜ் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த இருவர் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றதாக போலீசில் சந்திரலேகா புகார் அளித்தார். பிபிஇ கிட் அணிந்து வந்த இருவர், கொரோனா டெஸ்ட் எடுப்பதாக கூறி, மயக்க மருந்து தடவிய கர்ச்சீப்பை முகத்தில் வைத்ததும் மயங்கி விட்டேன். அரை மணிநேரம் கழித்து கண் விழித்தபோது பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் காணாமல் போயிருந்தது என புகார் கூறியிருந்தார். சிசிடிவிகளை போலீசார் ஆராய்ந்தபோது, பிபிஇ கிட் அணிந்தவர்கள் யாரும் வரவில்லை என்பது தெரிந்தது. சந்தேகப்பட்டு சந்திரலேகாவிடம் குறுக்குக்கேள்விகளை கேட்டபோது உண்மையை ஒப்புக்கொண்டார். கணவருக்கு தெரியாமல் உறவுக்கார பெண்ணுக்கு நகைகள் பணத்தை சந்திரலேகா கொடுத்துள்ளார். அவை திரும்ப கிடைக்காததால், கணவரை ஏமாற்ற கொள்ளையர்கள் வந்ததாக நாடகமாடியது தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X