Advertisement

தடுப்பூசி ஆலை தமிழக அரசே நடத்த தயார்!

பொது மே 27,2021 | 15:00 IST

Share

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான எச்எல்எல் பயோடெக் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அதிகளவில் தடுப்பூசி தேவைப்படுகிறது. செங்கல்பட்டு மருந்து உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு கொடுத்தால், தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக தொடங்க முடியும். அதன் மூலம், தடுப்பூசி போடும் பணிகளும் விரைவு படுத்தப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X