Advertisement

பள்ளி மீது கை வைத்தால்.. சுவாமி எச்சரிக்கை!

அரசியல் மே 28,2021 | 12:03 IST

Share

பாலியல் விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தா விட்டால், திமுக அரசு அதன் விளவுகளை சந்திக்க வேண்டும் என பா.ஜ மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கூறினார். பாலியல் புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. போலீசும் தீவிரமாக விசாரிக்கிறது. அதை குறை சொல்லவில்லை. ஆனால், இதை சாக்காக வைத்து அந்த பள்ளிக்கு எதிராக வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதும், அதன் பேரில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க போவதாக ஒரு தோற்றம் உருவாக்குவதும் தவறு. தி.மு.க ஒன்றும் பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லை. அதனால், எல்லா விஷயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லை என்றால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்படும். தி.மு.க ஆட்சி சுலபத்தில் வந்துவிடவில்லை. மனைவி துர்காவின் கடவுள் சிந்தனை, வழிபாடு ஆகியவற்றின் பலனாகத் தான், ஸ்டாலினுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை, அவர் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த பள்ளி என்றால், பிள்ளைகளை அதில் சேர்க்க பெற்றோர் விரும்புவது இயல்பு. அதற்காக பலரிடம் சிபாரிசுக்கு போவார்கள். அப்படி சிபாரிசு செய்த பலரை பள்ளி நிர்வாகம் ஆணவத்தோடு அவமதித்து இருக்கிறது. பிரச்னையை ஊதி பெரிதாக்க அதுவும் ஒரு காரணம். எனவே, பள்ளி நிர்வாகம் ஆணவ போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். அதில் சந்தேகம் ஏற்பட்டாலும், பள்ளியை மூட அல்லது நிர்வாகத்தை மாற்ற அரசு முயன்றாலும், விட மாட்டேன். அதை செய்து முடிக்க அவர்கள் கையில் ஆட்சி இருக்காது. இவ்வாறு, சுப்பிரமணியசுவாமி கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X