Advertisement

எம்எல்ஏ அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிமீறல்!

அரசியல் மே 28,2021 | 15:05 IST

Share

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் எம்எல்ஏ அலுவலக திறப்பு விழா நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அலுவலகம் அமைந்துள்ளது. நேரு பங்கேற்றதால் நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டு வந்திருந்தனர். ஊரடங்கு விதிகள் காற்றில் பறந்தன. இடைவெளி காணாமல் போனது. பலர் மாஸ்க் அணியவில்லை. மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் பெரம்பலூரில் வசிக்கிறார். கொரோனா வைரஸ் பரவும் இச்சூழலில் மக்களைச் சந்தித்து குறைகளை கேட்க ஒரு இடம் தேவை என்பதால் அலுவலகத்தை திறந்தேன் என்கிறார். புதன்கிழமை பவுர்ணமி தினம். இதை விட்டால் இன்னும் 2 வாரத்துக்கு நல்ல நாள் இல்லை. அதனால் அன்றைய தினமே அலுவலகத்தை திறந்துவிட ஏற்பாடுகளை செய்தேன். கொரோனா வைரஸ் பரவலால் குறைந்த நபர்களுக்குத்தான் அழைப்பிதழ் கொடுத்தேன். அமைச்சரை பார்க்கும் ஆர்வத்தில் நிறைய பேர் கூடி விட்டார்கள் எனவும் அவர் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X