பொது மே 28,2021 | 15:23 IST
முகவர்களுடன் நேரடி வர்த்தகம் செய்ய கோரிக்கை | ஆவின் பால் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. உத்தரவு கையெழுத்திட்டு 20 நாட்கள் கடந்தும் இன்னும் சில்லறை விற்பனையில் பால் விலை குறையவில்லை. ஆய்வில் தமிழகம் முழுவதும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்கப்படுவது தெரியவந்தது. அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவித்தார். ஆனால் இடைத்தரர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனைசெய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து