பொது மே 28,2021 | 18:55 IST
இந்தியாவில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான உருப்படியான திட்டம் அரசிடம் இல்லை என ராகுல் கூறியிருந்தார். ராகுல் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவதேகர் நிராகரித்துள்ளார். 2021 இறுதிக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து விடும்; அதாவது, 108 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி கிடைத்து விடும்; அதற்கான திட்டத்தை சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்து விட்டது; ஆக, டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்பதை ராகுல் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் தடுப்பூசி போடுவதில் பெருங்குழப்பம் காணப்படுகிறது; அந்தப் பிரச்னையை தீர்க்க ராகுல் கவனம் செலுத்தலாம் எனவும் பிரகாஷ் ஜாவதேகர் கூறினார்.
வாசகர் கருத்து