Advertisement

2டிஜி கோவிட் மருந்து விலை 990

பொது மே 28,2021 | 19:00 IST

Share

இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ, டாக்டர் ரெட்டிஸ் பார்மா நிறுவனம் இணைந்து '2டிஜி' எனப்படும் கோவிட் நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. இதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 2டிஜி' மருந்து தயாரிக்கும் பணியை ரெட்டிஸ் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை குளுக்கோஸ்போல தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்; ஐந்து அல்லது 7 நாட்களுக்கு தொடர்ந்து குடித்தால் நோயிலிருந்து மீளலாம். ஆக்சிஜன் தேவைப்படும் தீவிர பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கும் 2டிஜி மருந்து நல்ல பலனை தரும் என டிஆர்டிஓ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 2டிஜி கோவிட் மருந்தின் ஒரு பாக்கெட் விலை ரூ.990 என டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது. 2டிஜி மருந்தின் அதிக தேவையை கருத்தில் கொண்டு மேலும் 3 நிறுவனங்களில் உற்பத்திக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X