பொது ஜூன் 02,2021 | 09:45 IST
அமைச்சராக பதவி ஏற்றதிலிருந்து அமைச்சர் தியாகராஜன்,தினமும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்றார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் அல்லது அமைச்சரவையில் இரண்டு அல்லது மூன்றாவது நிலை வகித்தவர்களிடம் தான் நிதித்துறை பொறுப்பு இருந்துள்ளது . அமைச்சரவையில் கடைசியாக வரிசை படுத்தப்பட்டாலும், 8 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பில் தியாகராஜன் உள்ளார்- இவர் முறையாக செயல்பட்டிருந்தால், பெட்ரோல்- டீசலுக்கான ஜி.எஸ்.டி.வரியை நீக்கி இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை- மாறாக மத்திய அரசு உள்பட பலருடன் மோதல் போக்கை மட்டுமே கையாண்டு வருகிறார் என கிருஷ்ணசாமி கூறினார்.
வாசகர் கருத்து