Advertisement

5 ரூபாய் முட்டையை 8 ரூபாய்க்கு விற்ற திமுக பிரமுகர் கடைக்கு சீல்!

பொது ஜூன் 03,2021 | 17:05 IST

Share

திருப்பூர், கே.செட்டிபாளையம் அருகே வைகை பல்பொருள் அங்காடி உள்ளது. இதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் தி.மு.க பிரமுகர். ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் காய்கறி, மளிகை, பால் மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மளிகை பொருட்களை பேக்கிங் செய்து, ஜெயப்பிரகாஷ் விற்றுள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஜெயப்பிரகாஷ் கடைக்கு முட்டை வாங்க சென்றார். திருப்பூரில் ஒரு முட்டையின் விலை 5 ரூபாய். ஆனால் ஜெயப்பிரகாஷ் ஒரு முட்டை விலை 8 ரூபாய் என சொன்னார். இதைக் கேட்டதும் வாடிக்கையாளருக்கு கோபம் வந்தது. நேராக, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு போய் புகார் அளித்தார். அதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜெயப்பிரகாஷ் அதிக விலைக்கு மளிகை பொருட்களை விற்றது தெரியவந்தது. கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X