Advertisement

10 ஆண்டு வேடிக்கை பார்த்த அதிகாரிகள் சுறுசுறுப்பு

பொது ஜூன் 07,2021 | 14:48 IST

Share

சென்னை வடபழனி முருகன் கோயிலின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் சொத்துக்களை மீட்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துசமய அறநிலைய அமைச்சர் சேகர் பாபுவுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சரும், அதிகாரிகளும் களம் இறங்கினர். சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ஐந்தரை ஏக்கர் நிலம் 10 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வாகன காப்பகமாக மாற்றப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்கள், குடோன்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. 300 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்துக்களை அறநிலையத்துறை அதிரடியாக மீட்டது. இதே போல தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள் மீட்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X