பொது ஜூன் 09,2021 | 19:07 IST
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் முதல் சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சாய்ராம் ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் கொங்கன் சித்தர் மருத்துவம் இணைந்து 'ஆயுஷ் கோவில்' என்ற சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளன. பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் செயல்படும் இந்த மருத்துவமனையை போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். இங்கு, ஆக்சிஜன் வசதியுடன் 30 படுக்கைகள் உள்ளன. 20 சதவீத நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் நோய்க்கு இயற்கை முறையில் வைத்தியம் பார்க்கப்படுவதால், கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து