Advertisement

போட்டு வாங்கிய போலீஸ்

பொது ஜூன் 10,2021 | 12:13 IST

Share

அமெரிக்க-ஆஸ்திரேலிய உளவுத் துறைகளின் ரகசிய நடவடிக்கையால், 800க்கு மேலான சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க உளவுத் துறையான எப்.பி.ஐ., ஆஸ்திரேலிய உளவுத் துறையுடன் இணைந்து 'ஆபரேஷன் ட்ரோஜன் ஷீல்ட்' என்ற பெயரில் இந்த திட்டத்தை உருவாக்கியது. அதன்படி, 'அனம்' என்ற செயலி டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ஊரறிந்த சமூக விரோதிகளுக்கு வினியோகிக்கப்பட்டன. போலீசுக்கு தகவல் தரும் இன்பாமர்கள், முன்னாள் ரவுடிகள் இதற்கு உதவினர். ”ஒன்றரை லட்சம் ரூபாய் விலையுள்ள இந்த மொபைல் போனில் பேசவோ, மெயில் அனுப்பவோ முடியாது. படங்கள், தகவல்கள் மட்டும் அனுப்பலாம். உளவுத் துறையால் தகவல்களை இடைமறிக்க முடியாதபடி பாதுகாப்பு அரண் உள்ளது” என கூறி விற்பனை செய்ததால், உலகெங்கும் உள்ள சமூக விரோதிகள் ஆர்வமுடன் வாங்கினர். அவர்கள் அனம் போனில் அனுப்பி வந்த ரகசிய தகவல்கள் படங்கள் கூட்டாளிகளுக்கு சென்றதுடன், உளவுத் துறைக்கும் ரெகுலராக கிடைத்தன. அந்த தகவல்கள் அடிப்படையில் அவர்களின் ரகசிய திட்டங்களை அறிந்து, போலீசார் கைது செய்து வந்தனர். நாளடைவில் இந்த திட்டத்தில் மேலும் பல நாடுகள் இணைந்தன. நேற்று, நெதர்லாந்தில் எப்.பி.ஐ உதவி இயக்குனர் பேட்டி அளித்தார். 'நுாற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் முன்னுாறுக்கு மேலான கிரிமினல் கும்பல்களுக்கு, அனம் மொபைல் போன்கள் விற்கப்பட்டன. அவை மூலம், கிரிமினல்கள் அனுப்பிய 2 கோடி 70 லட்சம் ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில், 800 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் செய்ய இருந்த 150 கொலைகள் தடுக்கப்பட்டன. 250 ஆயுதங்கள், 300 கோடி ரூபாய் கரன்சி பறிமுதல் செய்யப்பட்டன” என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X