Advertisement

அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது!

அரசியல் ஜூன் 17,2021 | 20:12 IST

Share

அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கையில், அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள பழனிசாமி, அதிமுக ஆட்சியில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்கவில்லை. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அதுபோல, தற்போதைய முதல்வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது. ஓஎன்ஜிசி நிறுவன கடிதத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

kurinjikilan
kurinjikilan , இந்தியா. 19-ஜூன்-2021 | 19:08:27 IST Report Abuse

உண்மைதான்..

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X