Advertisement

பிரதமருடன் ஸ்டாலின் சந்திப்பு

பொது ஜூன் 17,2021 | 20:10 IST

Share

டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மனநிறைவு தருவதாக ஸ்டாலின் பின்னர் தெரிவித்தார். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தருவதாகவும், எந்த கோரிக்கையாக இருந்தாலும் தம்மை தொடர்புகொள்ளலாம் என்று பிரதமர் கூறியதாக சொன்னார். இந்த சந்தித்தபோது, தமிழகத்தின் 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் வழங்கினார். அதில் முக்கியமாக, கோவிட் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்க வேண்டும். செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும். நீட் உட்பட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். மேகதாது திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதற்கு தீர்வு காண வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். மதுரை, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X