Advertisement

பப்ஜி மதன் சிக்கினார் வங்கிக்கணக்கு முடக்கம்

பொது ஜூன் 18,2021 | 17:12 IST

Share

பப்ஜி விளையாட்டு மூலம் யூடியூப்பில் பிரபலம் ஆனவர் மதன். கேம் விளையாடும் போது ஆன்லைனில் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி ரெக்கார்ட் செய்து, அவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். மதன் மீது பலர் புகார் அளித்ததால் அவரை விராணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் தலைமறைவானார். தனிப்படை போலீசார் தர்மபுரியில் பப்ஜி மதனை கைது செய்தனர். பப்ஜி மூலம் பல கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்த மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அந்த கணக்கில் 4 கோடி ரூபாய் இருப்பதாக போலீசார் கூறினர். மதனின் 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மதனின் யூடியூப் நிர்வாகியாக செயல்பட்ட அவரது மனைவி கிருத்திகா 2 நாட்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டார். அவர் 8 மாத குழந்தையுடன் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X