Advertisement

2 பெண்களுடன் திருமணம் ஆசிரியரின் சாமர்த்தியம்!

பொது ஜூன் 18,2021 | 18:08 IST

Share

தெலங்கானா, அதிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினரான வேலாடி அர்ஜூன், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் உள்ளார். வெவ்வேறு கிராமத்தில் இருந்த அத்தை மகள்கள் சுரேகா, கனகா இருவரையும், ஒருவருக்கொருவர் தெரியாமல் அர்ஜூன் காதலித்து வந்தார். மூன்று ஆண்டுகளாக காதல் தொடர்ந்துள்ளது. இருவரையும் திருமணம் செய்து கொள்வதாக அவர்களது பெற்றோரிடம் அர்ஜூன். முதலில் பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஆனால், இரண்டு பெண்களும், அர்ஜூன் மாமாவைத்தான் மணப்போம் என்று தீர்க்கமாக கூறிவிட்டனர். வேறு வழியின்றி இரண்டு பெண் வீட்டாரும் சம்மதித்தனர். ஒரே மணப்பந்தலில் இரு பெண்களுக்கும் தாலி கட்டினார் அர்ஜூன். ஒரு பழங்குடியின இனத்தை சேர்ந்த ஒரு ஆண், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்வது இதுவே முதல்முறை என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X