Advertisement

கடற்படைக்கு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் தளபதி தகவல்

பொது ஜூன் 18,2021 | 21:30 IST

Share

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில், 96வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா நடந்தது. கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமை தளபதி அஜேந்திரா பகதூர் சிங் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பைலட் பயிற்சி நிறைவு செய்த 7 பேருக்கு சான்றிதழ், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கேடயம் வழங்கினார். அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்கிய பைலட் பவன்ராஜூக்கு கேரள கவர்னர் சுழற்கோப்பை விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய தலைமை தளபதி அஜேந்திரா பகதூர் சிங், இந்திய கடற்படையில் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் புதிதாக சேர்க்கப்பட இருப்பதால், கடற்படையின் பலம் கூடும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X