Advertisement

காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்

பொது ஜூன் 21,2021 | 13:21 IST

Share

சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது . அனைத்து கட்சிகளும் சட்டசபை குழு தலைவரை தேர்ந்தெடுத்த நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் தாமதம் ஆக்கியது .சீனியர் என்ற அடிப்படையில் பலர் போட்டியிட்டதே இதற்கு காரணம் . ஒரு வழியாக கட்சியின் தமிழக சட்டசபை குழுத்தலைவராக கு செல்வபெருந்தகை , துணைத் தலைவராக எம் எல் ஏ ராஜேஷ்குமார் சில நாட்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டனர் . இந்த நிலையில் சட்டசபை கொறடாவாக, எம்எல்ஏ விஜயதரணி , துணை கொறாடாவாக ஹசன் மவுலானாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

pradeesh parthasarathy
pradeesh parthasarathy , இந்தியா. 21-ஜூன்-2021 | 13:37:23 IST Report Abuse

அப்போ இனி தொகுதி பக்கம் பார்க்கவே வேண்டாம் போலிருக்கிறது .... தொகுதி மக்களின் முக்கிய பிரச்சினையான தனியார் காடுகள் , ECO SENSITIVE ZONE பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஏதாவது பேசுவாரா .. இல்லை கடந்த பத்து வருடங்கள் ஒட்டியது போன்று தொகுதி மக்களுக்கு நாமம் தானா ..?

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X