Advertisement

ஆக்சிஜன் உற்பத்தி தொடரட்டும் ஐகோர்ட் உத்தரவு

பொது ஜூன் 22,2021 | 18:00 IST

Share

கோவிட் நோய் தடுப்புப்பணிகள் குறித்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் 66 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்றும் விசாரித்தது. தமிழகத்தில் இதுவரை 1.2 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அரசு வக்கீல் சண்முகசுந்தரம் கூறினார். வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: 3வது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும், 2வது அலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர வேண்டும். ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடர வேண்டும். தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் நோய் பரவல் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X