Advertisement

மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்

பொது ஜூன் 24,2021 | 14:20 IST

Share

தமிழகம் முழுவதும் கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு பஸ் மற்றும் மெட்ரோ ரயில் சேவை 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் புறநகர் ரயில்கள் ஓடினாலும் அத்தியாவசிய துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. புறநகர் ரயில்களில் அனைத்து தரப்பினரையும் அனுமதிக்க வேண்டுமென பல துறைகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நாளை முதல் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் பயணம் செய்ய வேண்டும்; பெண் பயணிகள், குழந்தைகள் எந்நேரமும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X