Advertisement

பெங்களூருவில் பரபரப்பு

அரசியல் ஜூன் 24,2021 | 19:10 IST

Share

பெங்களூரு சலுவாதிபாளையா வார்டு முன்னாள் கவுன்சிலர் ரேகா கதிரேசன் வயது 40 பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர். தமிழர். ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்குவதற்காக சலுவாதிபாளையாவில் உள்ள தனது அலுவலகத்துக்கு இன்று காலை சென்றார். அப்போது மர்ம ஆசாமிகள் இருவர், ரேகாவை கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ரேகாவை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இரண்டு முறை பா.ஜ சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா, ரியல்எஸ்டேட், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். கொலை செய்வதற்கு முன், அலுவலகத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த 2 கேமராக்களை வேறு திசையில் கொலையாளிகள் திருப்பி வைத்துள்ளனர். இதனால் அரசியல் பகையால் கொலை நடந்திருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. ''24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா கூறினார். ரேகாவின் கணவர் கதிரேசன், 2018 ல் ரவுடி கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

rsudarsan lic
rsudarsan lic , இந்தியா. 24-ஜூன்-2021 | 20:39:04 IST Report Abuse

கொரோனா காலத்திலும் கொலைகள். சமூக விரோதிகளை கண்டவுடன் சுட வேண்டும்

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X