Advertisement

தேவைக்கு அதிகமாக ஆக்சிஜனை டில்லி பெற்றதா?

பொது ஜூன் 25,2021 | 20:00 IST

Share

இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோவிட் 2வது அலை கடுமையாக இருந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் இன்றி நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். டில்லிக்கு போதுமான ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்கவில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் கூறினார். உடனடியாக, டில்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆக்சிஜன் பயன்பாடு பற்றி ஆராய தணிக்கைக்குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. டில்லி அரசு, தேவையை விட 4 மடங்கு கூடுதலாக ஆக்சிஜனை பெற்றுள்ளதாக அந்த குழு அறிக்கை அளித்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் டில்லி மருத்துவமனைகளில் தினசரி ஆக்சிஜன் பயன்பாடு 350 டன்னை தாண்டவில்லை. டில்லியில் உள்ள படுக்கைகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 289 டன்தான். ஆனால், 4 மடங்கு கூடுதலாக 1,140 டன் ஆக்சிஜனை டில்லி பெற்றுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டில்லிக்கு அதிகப்படியான ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், மற்ற மாநிலங்களுக்கு கிடைக்காமல் போனது; இது கெஜ்ரிவாலின் நிர்வாகத்திறமை இன்மையை காட்டுவதாக பலரும் ட்விட்டரில் வசை பாடுகின்றனர். அதிக பாதிப்புக்குள்ளான பல மாநிலங்களில் நோயாளிகள் இறப்புக்கு காரணமான கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் ட்விட்டரில் ட்ரண்டிங் ஆனது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X