Advertisement

நானும் கிரிக்கெட் வீரர் தான் - முதல்வர் ஸ்டாலின்

அரசியல் ஜூன் 26,2021 | 13:55 IST

Share

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் . அதன் பின் பேசிய அவர் , ஜப்பானில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 7 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர் . தங்கம் , வெள்ளி , வெண்கல பதக்கங்கள் வெல்பவர்களுக்கு தலா ரூ 3, 2,1 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றார் . ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளும் வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ 25 வரை செலவு செய்யப்படுவதை குறிப்பிட்டார் . பள்ளி பருவத்திலும் , மேயராக இருந்த போதும் கிரிக்கெட் உட்பட விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு இருக்கிறேன் . வீரர்களின் தேவை எனக்கு தெரியும் . அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X