Advertisement

இறந்தவர்களுக்கு நிதி உதவி மத்திய அரசுக்கு 6 வாரம் கெடு

பொது ஜூன் 30,2021 | 22:36 IST

Share

கோவிட் தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொது சுகாதாரம் மாநில பட்டியலில் வருகிறது. தொற்றால் இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்குமளவுக்கு நிதியாதாரம் மாநிலங்களிடம் இல்லை; அப்படிக் கொடுத்தால் கோவிட் நோய் தடுப்புப் பணிகளை முழுமையாக செய்ய முடியாது என மத்திய அரசு வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டியது அரசின் கடமை என்றனர். நிதியுதவி வழங்குவதற்கான விதிமுறைகளை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும்; எவ்வளவு நிதியுதவி வழங்க முடியும் என்பதையும் அரசு இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X