சிறப்பு தொகுப்புகள் ஜூலை 06,2021 | 17:28 IST
கோவை அம்ரிதா ஸ்கூல் ஆப் அக்ரிசல்ச்சுரல் சயின்ச்ஸ் நடத்தும் ”உணவுப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால பட்டதாரிகள் பங்கு” என்ற தலைப்பிலான குழு விவாதம் ஜூலை 8ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் வேளாண் குழு தலைவர் திரு. விஜய் சர்தானா, கல்வி ஆலோசகர் மற்றும் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக தொழில்முனைவோர் பிரிவு முன்னாள் இயக்குநர் டாக்டர் டி.பி. சேதுமாதவன், கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் வனவியல் கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் கே. சுதாகரா, பார்ம் டெக் கன்சல்டென்சி நிர்வாக இயக்குநர் மற்றும் டெக் பார்மிங் இன்டர்நேஷனல் பொது மேலாளர் முரளி மனோகர் மற்றும் அம்ரிதா வேளாண் அறிவியல் கல்வி நிறுவன பேராசிரியர் டாக்டர் சுதீஷ் மணலில் ஆகியோர் பங்கேற்று வேளாண்மை,உணவு மற்றும் அதை சார்ந்த துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர். இலவச முன்பதிவுக்கு : https://zcmp.in/VIlN
வாசகர் கருத்து