Advertisement

காஷ்மீரில் அமைதி திரும்புகிறது

பொது ஜூலை 10,2021 | 22:43 IST

Share

காஷ்மீரில் அமைதி திரும்புகிறது. இதற்கு, ராணுவம் 3 புள்ளி விவரங்களை சான்றாக காட்டுகிறது. 2021ல் ஜூன் 1 வரையிலான நிலவரப்படி 58 இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து துப்பாக்கி தூக்கினர். 2020ல் இதே காலக் கட்டத்தில் பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுத்த இளைஞர்களின் எண்ணிக்கை 81. இந்தாண்டு ஜூலை 1ம்தேதி வரை இந்திய பாகிஸ்தான் எல்லையில் 592 முறை போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்கள் நடந்துள்ளளன; கடந்தாண்டு அதே காலக் கட்டத்தில் நடந்த போர் நிறுத்த விதிமீறல்கள் 2300. அதேபோல, இந்தாண்டு ஜூலை 8 வரை 68 பயங்கரவாதிகளை ராணுவம் தீர்த்துக்கட்டியது; கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 127 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீரில் துப்பாக்கிச் சத்தமும், குண்டு வெடிப்புச்சம்பவங்களும் குறைந்து அமைதியான சூழல் நிலவுவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X