பொது ஜூலை 22,2021 | 15:04 IST
கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதாரர்கள் கணேஷ்-, சுவாமிநாதன் விக்டரி பைனான்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ளனர். கணேஷ், பா.ஜ மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர். விக்டரி பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தனர். அதை நம்பி கும்பகோணத்தை சேர்ந்த பலரும் போட்டி போட்டு முதலீடு செய்தனர். கோவிட் பரவலை காரணம் காட்டி, பணத்தை முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஜபருல்லா, ஃபைரோஸ் பானு தம்பதி, 15 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டதாக, சகோதரர்கள் மீது தஞ்சாவூர் எஸ்பியிடம் புகார் அளித்தனர். பணத்தை திருப்பி கேட்டால் அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என புகாரில் கூறியிருந்தனர். இதுவரை 15 பேர் புகார் அளித்துள்ளனர். இன்னும் பலர் பணத்தை பறிகொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், ெஹலிகாப்டர் சகோதரர்கள் 600 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கும்பகோணம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து கணேஷ் நீக்கப்பட்டார். பைனான்ஸ் நிறுவன மேனேஜர் ஸ்ரீகாந்தனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து