பொது ஜூலை 22,2021 | 21:47 IST
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்த வருகிறது. இச்சூழலில், மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும்போது, பிரச்னை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற கோர்ட் உத்தரவின் அடிப்படையில், நடிகை இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். சாந்தினி மலேசியா குடியுரிமை பெற்றவர். சென்னையில் இருந்து கொண்டு வழக்குகளை நடத்த வேண்டும் என்பதால், இடைக்கால தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. #ADMK_minister #Mani #ActressChandhini
வாசகர் கருத்து