Advertisement

ராமர் கோவிலை வேகமாக கட்டி முடிப்போம் - மாயாவதி கட்சி அறிவிப்பு

அரசியல் ஜூலை 24,2021 | 06:35 IST

Share

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. பாரதிய ஜனதாவிடம் இருந்து பிராமணர் ஓட்டுகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு இழுக்கும்விதமாக, பிராமணர் மாநாட்டை அயோத்தியில் மாயாவதி நடத்தினார். மாயாவதிக்கு மிக நெருக்கமான தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா பேசினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் எண்ணம் யோகி அரசுக்கு இல்லை. கோவில் கட்டுவதாகச் சொல்லி கோடி கோடியாக சுருட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்கள் என குற்றம்சாட்டினார். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை மிக வேகமாக கட்டி முடிப்போம் எனவும் சதீஷ் சந்திர மிஸ்ரா உறுதியளித்தார். தலித்துகளுக்காக குரல் கொடுத்து வந்த மாயாவதியின் நிலைப்பாடு, பிராமணர், ராமர் கோவில் என தடம் மாறியது உத்தரப்பிரதேச தேர்தலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிராமணருக்கு 11 சதவீத ஓட்டு உள்ளது. 2019 தேர்தலில் 80 சதவீத பிராமணர் ஓட்டு பாஜவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X