Advertisement

துப்பாக்கியுடன் செல்பி எடுத்த இளம்பெண் பரிதாப பலி

பொது ஜூலை 25,2021 | 06:49 IST

Share

செல்பி மோகம் இளம்பெண்ணின் உயிரை குடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் குப்தாவுக்கும் ராதிகாவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராதிகாவின் மாமானார் ராஜேஷ் குப்தா நகைக்கடை வைத்துள்ளார். பாதுகாப்புக்காக ஒற்றைக் குழல் துப்பாக்கியை வைத்துள்ளார். ராதிகாவுக்கு செல்பி எடுக்கும் ஆர்வம் அதிகம். மாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டார். கழுத்துக்கு நேராக துப்பாக்கி முனையை வைத்தபடி ஸ்டைலாக செல்பி எடுத்தார். ஒரு போட்டோ போதாது இன்னும் எடுப்போம் என நினைத்தார். அப்போது அவரையும் அறியாமல் ட்ரிக்கரை அழுத்திவிட கழுத்தில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு எல்லாரும் ராதிகா அறைக்கு ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராதிகாவை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டுஓடினர். பரிசோதித்த டாக்டர் கையை விரித்து விட்டார். உள்ளாட்சி தேர்தலுக்காக போலீசிடம் துப்பாக்கியை ஒப்படைத்திருந்தேன். 2 நாளுக்கு முன்னாடிதான் போலீஸ் நிலையத்திலிருந்து திரும்ப வாங்கி வந்தேன்; துப்பாக்கியில் குண்டு இருப்பதை அறியாமல் அழுத்தியதால் குண்டு பாய்ந்திருக்கலாம் என மாமனார் ராஜேஷ் குப்தா கண்ணீருடன் கூறினார். சம்பந்தி சொல்வதை ராதிகாவின் அப்பா நம்புவதாக இல்லை; மகளை கொன்று விட்டனர் என போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X