Advertisement

பிச்சைக்காரரின் வங்கிக்கணக்கில் ரூ.56 லட்சம் மதுரையில் பரபரப்பு

பொது ஜூலை 28,2021 | 19:23 IST

Share

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவாயில் முன் 65 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரர் இறந்து கிடந்தார். உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். அவரது பையை சோதனை செய்தபோது, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பாஸ்புக் இருந்தது. அதில் எஸ்.ராதா, நாகமலை, மதுரை என்ற முகவரி இருந்தது. 2019 ல் வங்கியில் இருந்து 36 லட்ச ரூபாய் எடுத்துள்ளார். தற்போது, அவரது வங்கி கணக்கில் 20 லட்ச ரூபாய் இருப்பு உள்ளது. இதையடுத்து பிச்சைக்காரரை பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ராதா பிச்சை எடுப்பதற்கு முன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் குடும்ப பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறி, மதுரை மருத்துவமனை முன் பிச்சை எடுக்கத் தொடங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அரை கோடி ரூபாயை வங்கிக்கணக்கில் வைத்துக்கொண்டு ஒருவர் மருத்துவமனை முன் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தது பற்றி மதுரைவாசிகள் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X