Advertisement

ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது அதிகாரிகளுடன் திமுகவினர் மோதல்

பொது ஜூலை 31,2021 | 12:00 IST

Share

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், 15 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்டு, விரைவில் திறக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றும் பணிகளில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் மேற்கு பகுதி பழக்கடைகளை அகற்ற முயன்றபோது, கடைக்காரர்களுக்கு ஆதரவாக தி.மு.க., எம்.எல்.ஏ., நீலமேகம் எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்தார். நேற்று மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் நேரடியாக சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றார். அப்போது தி.மு.க., மாநகர துணைச் செயலர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் மேத்தா உள்ளிட்டோர் அங்கு திரண்டனர். ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பான சூழல் உருவானதால், 2வது நாளாக ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X