Advertisement

மாஸ்க் போட்டால் இந்த பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்

பொது ஜூலை 31,2021 | 21:20 IST

Share

சென்னையை சேர்ந்த ஹெல்த் எனர்ஜி நிறுவனம் கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் காற்று மாசு குறித்து மாநகராட்சியின் 20 இடங்களில் ஆய்வு செய்தது . தொழிற்சாலைகள் , குவாரி , கட்டுமான பணிகளாலும் , குப்பைகள் எரிப்பது , வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் , காற்றின் தரம் பிம் 2.5 ஆக அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது . வீடு , தொழிற்சாலை கூரைகள் , வாகனம் செல்லும் பகுதிகளில் , ஆட்டோமேடிக் ஏர் சாம்பிளர் கருவி பொருத்தப்பட்டது . ஒவ்வொரு நாளும் அதில் பதிவாகும் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது . பிஎம் 2.5 அளவு தூசிகளை கண்ணால் பார்க்க முடியாது. தலைமுடி டையாமிட்டரை விட 30 மடங்கு சிறியது . நச்சு காற்றை சுவாகிக்கும் போது நாளடைவில் உடலில் நுரையீரல் பிரச்னைகள் ஏற்படும் என்கின்றனர், காற்றில் அதிகளவில் சிலிக்கா , நிக்கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட சென்னையில் காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணமும் உண்டு. ஊரடங்கால் வாகனம் ஓடாத சமயத்தை தவிர கடந்த மூன்று ஆண்டுகளில் காற்று தரம் மோசம் ஆகி இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. டெல்லியில் விட மோசாமான நிலை சென்னையில் இல்லை. ஆனால் அந்த அளவு மாசு ஏற்படாதாவாறு பார்த்து கொள்ளவும், நுரையீரல் பாதிப்பு , மூச்சு பிரச்னைகள் எத்தனை பேருக்கு ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை . மாஸ்க் போட்டல் கோவிட் மட்டுமில்லை , காற்றில் இருக்கும் மாசை சுவாசிப்பதையும் தவிர்க்க முடியும் . ஆனால் இதற்கு இது மட்டுமே தீர்வு இல்லை . கெஜப்பிரியா காற்று மாசு ஆராய்ச்சியாளர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X