பொது ஆகஸ்ட் 01,2021 | 08:20 IST
கோவிட் பரவலை கட்டுபடுத்துவதற்காக மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்குகள் மால்கள் தமிழகத்தில் இன்னும் திறக்கவில்லை. ஒரு சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமை என்பதால், திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் இன்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிக்கவில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்கள் மாஸ்க்கையும் போட மறந்தனர். இது போன்ற நிகழ்வுகளால் குறைந்து வரும் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் கூடும் இடங்களை கண்டறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து