பொது ஆகஸ்ட் 02,2021 | 15:21 IST
புதுச்சேரியில் ஜூலை 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது. சுகாதார மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் 3வது அலை தொடங்கியுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என அதிகாரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்கும் எண்ணம் இல்லை என்றார்.
வாசகர் கருத்து